ஆத்தூர் ஜி.ஹெச்சில் மருத்துவ கழிவுகள் அற்றம்

ஆத்தூர், மே 21:  ஆத்தூர் அரசு மருத்துவமனையில் தேங்கும் மருந்துவ கழிவுகள் மற்றும் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்காததால், நகராட்சி ஊழியர்கள் குப்பைகளை பெற்றுச் செல்ல மறுத்து விட்டனர். இதனால், கடந்த 4 நாட்களாக மருத்துவமனை வளாகத்தில் குப்பைகள் தேங்கி கிடந்தது. இதனால் மருத்துவமனை ஊழியர்களும், நோயாளிகளும் கடும் அவதிக்குள்ளானர். இந்நிலையில், ஆத்தூர் நகராட்சியின் மூலம் மருத்துவமனை நிர்வாகத்திற்கு, குப்பைகளை தரம் பிரித்து தரக்கோரி கடிதம் அனுப்பப்பட்டது. இதனையடுத்து மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை துப்புரவு தொழிலாளர்களால் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகள் தனித்தனியாக தரம் பிரித்து தருவதற்கு மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக் கொண்டது. நேற்று முதல் தரம் பிரித்து கொடுக்கப்பட்ட குப்பைகளை, நகராட்சி துப்புரவு பணியாளர்கள் பெற்றுக் கொண்டனர். இதனால் தற்போது மருத்துவமனை வளாகம் முற்றிலும் தூய்மைபடுத்தப்பட்ட நிலையில் உள்ளது.

Related Stories: