×

நாமகிரிப்பேட்டை பகுதியில் வெள்ளரி அறுவடை தீவிரம்

கிலோ ₹20க்கு விற்பனைநாமகிரிப்பேட்டை, மே 21:  நாமகிரிப்பேட்டை பகுதியில் வெள்ளரி அறுவடை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கிலோ ₹20 வீதம் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். நாமகிரிப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக வெள்ளரி சாகுபடி செய்துள்ளனர். கோடையை எதிர்நாக்கி பயிரிட்ட வெள்ளரியில் அதிகளவில் காய்கள் பிடித்துள்ளது. அதனை பறித்து விற்பனைக்காக அனுப்பி வைக்கும் பணியை விவசாயிகள் முடுக்கி விட்டுள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பெரும்பாலும் பிற மாவட்டத்தில் இருந்துதான் இப்பகுதிக்கு வெள்ளரிக்காய்கள் விற்பனைக்கு வரும். ஆனால், கடந்த ஆண்டு சுட்டெரித்த வெயிலுக்கு வெள்ளரிக்காய்களின் தேவை அதிகரித்தது. இதனால், கோடையை எதிர்நோக்கி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இப்பகுதியிலேயே பரவலாக வெள்ளரி சாகுபடியில் ஈடுபட்டோம்.  

தற்போது, அறுவடை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சாகுபடி செலவாக ஏக்கருக்கு ₹60 ஆயிரம் முதல் ₹70 ஆயிரம் வரையிலும் செலவாகிறது. ஏக்கருக்கு அதிகபட்சமாக 10 டன் வரை மகசூல் கிடைக்க வாய்்ப்புள்ளது. சேலம், ஆத்தூர், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதியில் இருந்து வியாபாரிகள் நேரடியாக தோட்டத்திற்கே வந்து கொள்முதல் செய்கின்றனர். கிலோவுக்கு ₹15 முதல் ₹20 வரையிலும் வாங்கி செல்கின்றனர் என்றனர்.


Tags : area ,Namakiripetta ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...