×

14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை கட்டுமான தொழிலில் ஈடுபடுத்தினால்

ஒப்பந்ததாரருக்கு 2 ஆண்டு சிறைகிருஷ்ணகிரி, மே 21: 14 வயது நிறைவடையாத சிறுவர்களை கட்டுமான தொழிலில் ஈடுபடுத்தினால் கட்டுமான உரிமையாளர், ஒப்பந்ததாரருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும். இதுகுறித்து சேலம் கட்டிடம் மற்றும் இதர கட்டுமான பிரிவு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அரசு செயலர் மற்றும் கட்டிட மற்றும் கட்டுமான ஆய்வுகளின் தலைமை ஆய்வாளர் உத்தரவுபடி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் ஆகியோர், கூட்டாக வணிக வளாக கட்டிடத்தை ஆய்வு செய்தபோது, 14 வயது நிறைவடையாத சிறுவனை குழந்தை தொழிலாளராக ஈடுபடுத்தி வந்தது தெரியவந்துள்ளது. எனவே, சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அனைத்து கட்டிட மற்றும் இதர கட்டுமான உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள், 14 வயது நிறைவடையாத எந்தவொரு குழந்தைகளையும் தொழிலாளர்களாக பணியமர்த்தியது கண்டறியப்பட்டால், குழந்தை மற்றும் வளரின பருவ தொழிலாளர் சட்டம் 1986ன் படி, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, 6 மாதம் சிறை அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனையோ அல்லது ₹20 ஆயிரம் முதல் ₹50 ஆயிரம் வரை அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ தண்டனையாக வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா