×

புட்டிரெட்டிப்பட்டியில் குப்பை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசு

கடத்தூர்,  மே  21: கடத்தூர் அடுத்த புட்டிரெட்டிப்பட்டியில் குப்பை எரிப்பதால், சுற்றுச்சூழல் மாசடையும் அபாயம் உள்ளது. கடத்தூர் அடுத்த புட்டிரெட்டிப்பட்டியில், சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் நியமிக்கப்பட்ட துப்புரவு தொழிலாளர்கள், நாள்தோறும் சேகரித்த மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து,  சாலையோர பகுதியிலேயே கொட்டி தீ வைத்து எரிகின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், புகையால் அப்பகுதி மக்கள் மூச்சுத்திணறல், கண் எரிச்சலால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தீ வைத்து எரிக்கும் இடத்தின் அருகில், டிரான்ஸ்பார்மர், பள்ளி வளாகம் மற்றும் குடியிருப்புகள் உள்ளது. இந்த நிலையில் குப்பைக்கு தீ வைத்து எரிப்பதால், அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, குப்பை  தொட்டி வைத்து, குப்பையாக முறையாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா