×

முசிறி அருகே தண்டலைப்புத்தூர் கிராமத்தில் அரசு பள்ளி வளாகத்திற்கு தரமற்ற சுற்றுச்சுவர் கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தா.பேட்டை, மே 21: திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா தண்டலைப்புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் தரமற்று இருப்பதாகவும் திருச்சி கலெக்டர் உரிய அதிகாரிகள் கொண்டு ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.முசிறி அருகே உள்ள தண்டலைப்புத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டிதர வேண்டுமென இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்கு அரசால் நிதி ஒதுக்கீடு ய்யப்பட்டது. 2016-2017ம் நிதியாண்டில் தண்டலைப்புத்தூர் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மேற்கு மற்றும் வடக்கு பகுதிக்கு சுற்றுசுவர் ரூ.16.43லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்ட சுற்றுச்சுவர் போதிய பலமின்றி வலுவிழந்த நிலையில் காணப்படுகிறது. கையால் குத்தினால் சுவர் இடிந்து விழுந்து விடும் நிலையில் உள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் துரைராஜ் என்பவர் கூறும்போது, பள்ளி மற்றும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி கட்டப்பட்ட சுற்றுச்சுவர் தற்போது மாணவ, மாணவிகளின் உயிருக்கு உலை வைக்கும் சுவராக மாறியுள்ளது. தரமற்ற பொருட்களாலும் சிமெண்ட் மணல் போன்ற கட்டுமான பொருட்களின் கலவை முறையாக பயன்படுத்தி பள்ளியின் சுற்றுசுவரை கட்டாததால் சுற்றுசுவர் பல இடங்களில் உடைந்துள்ளது.
 
மேலும் சுவர் பலம் இழந்த நிலையில் உள்ளதால் கைகளால் குத்தினால் கூட உடையும் நிலையில் உள்ளது. எந்த ஆயுதமுமின்றி கைகளாலேயே செங்கல்லை தனித்தனியே பிரித்து எடுத்து விடமுடியும். பலமான காற்று, மழை, ஆகிய இயற்கை சீற்றங்களுக்கு இந்த சுவர் தாங்காது. பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளியில் விளையாடும்போது அல்லது தரமற்ற சுவரின் அருகே செல்லும் போது சுவர் சாய்ந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலிருந்து உயர் பொறியாளர்களை நேரில் அனுப்பி சுற்றுசுவரின் தரத்தை ஆய்வு செய்வதுடன்  சுவர் கட்டும் பணியின்போது முசிறி ஊராட்சி ஒன்றியத்தில் பணியிலிருந்த ஒன்றிய பொறியாளர்களை நேரில் அழைத்து விசாரணை செய்ய வேண்டும் என்று கூறினார். இந்நிலையில் பொதுமக்கள் பலமில்லாமல் கட்டப்பட்டுள்ள சுற்றுசுவர் குறித்து உயர் அலுவலர்களுக்கு புகார் தெரிவித்ததை அடுத்து சுற்றுச்சுவரின் மேற்புறம் உள்ள சிமெண்ட் பூச்சை அகற்றி புதிதாக பூச்சுவேலை நடைபெற்று வருகிறது.  வெளிப்பார்வைக்கு தரமான சுற்றுச்சுவர் போன்று காணப்படும். எனவே பலமில்லாத பள்ளி சுற்றுச்சுவரை முழுவதுமாக இடித்து தரமானதாக சுற்றுச்சுவர் கட்ட திருச்சி கலெக்டர்ம நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : government school premises ,Thandaliputhur ,village ,Musiri ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...