வெயிலின் தாக்கத்தில் தண்டவாளத்தில் நடந்து சென்ற தொழிலாளி மயங்கி விழுந்து பலி

திருச்சி, மே 21:  திருச்சி கல்லுக்குழியை சேர்ந்தவர் நஞ்சுண்டான் (57). இவர் உறையூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். தினமும் வீட்டில் இருந்து கல்லுக்குழி ரயில்வே பாதை வழியே குட்ஷெட் மேம்பாலம் சென்று அங்கிருந்து தலைமை தபால் நிலையத்தில் இருந்து பஸ்சில் வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து புறப்பட்ட நஞ்சுண்டான், கல்லுக்குழி ரயில்ேவ பகுதி தண்டவாளம் ஓரம் நடந்து சென்றார். இதில் நேற்று கடுமையான வெயில் அடித்ததால் அதன் தாக்கம் தாங்க முடியாமல் ரயில்வே பகுதியில் மயங்கி விழுந்த நஞ்சுண்டான், சிறிது நேரத்தில் இறந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் குட்ஷெட் மேம்பாலத்தில் சென்றவர்கள், பாலத்தின் மேலிருந்து குதித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறிய தகவல் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் குட்ஷெட் மேம்பாலத்தில் வாகனங்களை நிறுத்திய வாகன ஓட்டிகள், வேடிக்கை பார்த்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே போலீசார் அங்கு ெசன்ற நஞ்சுண்டான் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.  அவரது உடலில் காயங்கள் இல்லாததாலும் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் மயங்கி விழுந்து இறந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தியது.

Related Stories: