கிராமப்புற கோயில்களை பராமரிக்க இந்து மகாசபா கூட்டத்தில் ஆலோசனை

தா.பேட்டை, மே 21:  கிராமப்புற கோயில்களை பராமரிப்பது பற்றி முசிறி அருகே நடந்த இந்து மகாசபா ஆலய பாதுகாப்பு பிரிவு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. முசிறி அருகே உள்ள திருத்தியமலை கிராமத்தில் அகில பாரத இந்து மகாசபா ஆலய பாதுகாப்பு பிரிவு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு  இந்து மகாசபா அமைப்பின் நிர்வாகி சிரஞ்சீவி தலைமை வகித்தார். மாநில  துணைத்தலைவர் ராகவன் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் ராமன்நிரஞ்சன்,  மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கிராமப்புற கோயில்களை  பராமரிப்பது பற்றியும், பழுதடைந்த கோயில்களை சீரமைத்து கட்டுவது  குறித்தும், ஆலோசனைகளை வழங்கி பேசினர். அப்போது திருச்சி மண்டலத்தில் உள்ள  சேதமடைந்த ஆலயங்களை புதுப்பிப்பது, கோயில்களில் நின்றுபோன திருவிழாக்களை  நடைபெற செய்வது, கோயில் ஆக்கிரமிப்பை அகற்றுவது, அனைத்து இந்துக்களையும்  ஆலய பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டது. நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து  கொண்டனர். திருச்சி மண்டல தலைவர் சொப்னா நன்றி கூறினார்.

Related Stories: