திருச்சி விமான நிலையத்தில் ரூ.17.56 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

ஏர்போர்ட், மே 21: திருச்சி விமான நிலையத்தில் ரூ.17.56 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து இது தொடர்பாக தங்கம் கடத்தி வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். துபாயில் இருந்து நேற்றுகாலை இலங்கை  வழியாக திருச்சி வந்த லங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத் துறை உதவி ஆணையர் பண்டாரம் தலைமையிலான அதிகாரிகள் சோதனை செய்தனர்.  அப்போது சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த யாசர் அராபத் (23) மற்றும்  தம்ஜித் அசாருதீன் (23) ஆகிய இருவரும் ஆசனவாயிலில் மறைத்து 560 கிராம் எடை கொண்ட  தங்கத்தை வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தி வரப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ.17.56 லட்சம். இதேபோல் நேற்றுமுன்தினம் மலேசிய தலைநகர் கோலம்பூரில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானம் மற்றும் துபாயில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில்  வந்த மூன்று பயணிகள் ஆசன வாயிலில் கடத்தி வந்த ரூ.41 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது

Related Stories: