×

கூ.நல்லூர் புதிய இறைச்சிக்கூடம் உடனடியாக திறக்க வேண்டும் திருவாரூர் கலெக்டரிடம் கோரிக்கை மனு

கூத்தாநல்லூர், மே 21: கூத்தாநல்லூரில் புதிதாக அமைக்கப்பட்டு இன்னும் பயன்பாட்டிற்கு வராமலிருக்கும் இறைச்சிக்கூடத்தை விரைவில் திறக்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம்  கூத்தாநல்லூர் அல்அமான் இளைஞர் இயக்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. கூத்தாநல்லூர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மார்க்கெட்டில் புதிய இறைச்சிக்கூடம் (ஸ்லாட்டர் ஹவுஸ்) கட்டப்பட்டு உள்ளது. அது இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இந்த இறைச்சிக்கூடத்தை உடனடியாக திறந்து சுகாதாரமான இறைச்சி மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என அல் அமான் இளைஞர்  இயக்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு குறித்து அல் அமான் இளைஞர் இயக்கத்தின் தலைவர் கே.ஜே. முகம்மது சகாபுதீன் கூறியதாவது,

கூத்தாநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட  பகுதிகளில் சுகாதாரமற்ற முறையில் ஆடு அறுக்கும் இடத்தை உடனடியாக மாற்ற வேண்டும். தற்போது இயங்கும் இறைச்சிக்கூடம்  இடப்பற்றாக்குறையால் கழிவுகள் வெளியேற வழியின்றி சுகாதாரமற்ற முறையில் உள்ளது. சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் இறைச்சி வாங்க இந்த பகுதிக்குத்தான் வர வேண்டும். மேலும் கூத்தாநல்லூர் நகராட்சியில் நகராட்சி விதிகளின் படி கால்நடை மருத்துவரை கொண்டு இறைச்சிக்காக அறுக்கப்படும் ஆடுகளை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். தற்போது இந்த நடைமுறை இல்லாத காரணத்தால்  சுகாதாரமற்ற ஆடுகள் அறுக்கப்பட்டு இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. எனவே பொதுமக்களின் சுகாதாரம் சம்பந்தப்பட்ட இந்த பிரச்னையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு கூத்தாநல்லூர் இறைச்சிக்கூடத்தை சுகாதாரமான முறையில் பயன்பட்டுக்கு கொண்டு வருவதோடு, கால்நடை மருத்துவரை உடனடியாக ஆட்டிறைச்சி ஆய்வுக்கு நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் கோரிக்கை அடங்கிய மனு மாவட்ட ஆட்சியரிடம் தரப்பட்டுள்ளது என்றார்.

Tags : Nellore ,meadows ,Collector ,
× RELATED திருக்கோவிலூர், நெல்லூரில் பயங்கரம்: இரு விபத்துகளில் 6 பேர் பலி