×

மத நல்லிணக்கத்தின் அடையாளமான கூத்தாநல்லூரில் 100வது ஆண்டைத்தொடும் ஆங்கிலேயர் காலத்து மரக்கடை கிறிஸ்தவ ஆலயம்

கூத்தாநல்லூர், மே 21: கூத்தால்லூர் அருகே 100வது வயதைப்பூர்த்தி செய்த ஒரு கிறிஸ்தவ ஆலயம் கம்பீரமாக நின்று காலத்தின் அடையாளமாக காட்சி தந்துகொண்டிருக்கிறது.கூத்தாநல்லூர் என்பது சரித்திரத்தின் பார்வையில் பல அற்புதங்களை கொண்ட பகுதி. சின்ன சிங்கப்பூர் என்று செல்லமாக அழைக்கப்படும் இந்த பகுதி இந்து-இஸ்லாமிய-கிறிஸ்தவ மக்கள் ஒன்றிணைந்து வாழும் மத நல்லிணக்கத்திற்கு அடையாளமான பூமியும் ஆகும்.
இதற்கு சான்றாக விளங்குவது கூத்தாநல்லூர், அத்திக்கடை, பொதக்குடி, பூதமங்கலம் தண்ணீர்குன்னம் ஆகிய பகுதிகளில் காணப்படும் கலைநயம் கொண்டு கட்டப்பட்ட 17 க்கும் அதிகமான பள்ளிவாசல்கள், 700 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச்சிறப்புமிக்க இந்து கோவில்கள், 100 ஆண்டுகளை கடக்கும் அழகுமிகு புனித விண்ணரசி அன்னை ஆர்.சி.கிறிஸ்தவ தேவாலயம், சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயம் இப்படி சமுதாய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக காட்சியளிக்கிறது கூத்தாநல்லூரும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளும் .

Tags : anniversary ,
× RELATED பந்தலூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா