குடியிருப்போர் நலச்சங்கம் குற்றச்சாட்டு

தஞ்சை, மே 21: வீட்டுவரி உயர்வை பன்மடங்கு உயர்த்தி வீட்டுக்கு வீடு நோட்டீஸ் கொடுப்பது தேர்தல் நடத்தை விதிகளுக்கு முற்றிலும் முரணானது என்று குடியிருப்போர் நலச்சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். தஞ்சை சுஜானா நகர் குடியிருப்போர் நலச்சங்க கூட்டம் மூத்த உறுப்பினர் பரமசிவம் தலைமையில் நடந்தது. பொருளாளர் செல்வம், துணை செயலாளர் ரவி, கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் தரும.கருணாநிதி வரவேற்றார். கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த நிலையில் வீட்டுவரி உயர்வை பன்மடங்கு உயர்த்தி வீட்டுக்கு வீடு நோட்டீஸ் கொடுத்து ஆட்சேபனை கோரப்பட்டுள்ளது. இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு முற்றிலும் முரணானதாகும்.

எனவே வீட்டுவரி உயர்வு குறித்து ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம் கொடுத்து நோட்டீஸ் கொடுக்க நகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரில் தார்சாலைகள் முற்றிலும் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. உடனடியாக புதிய சாலைகள் அமைக்கவும், நகரில் மாநகராட்சி சார்பில் கட்டி ஓராண்டே ஆன பால்வாடி கட்டிட தரைதளம் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளதை சீரமைக்க வேண்டும். பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பூங்கா அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி- தஞ்சை இடையே இரட்டை இருப்பு பாதைகள் அமைக்கப்பட்டு முற்றிலும் மின் மயமாக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து ரயிலை இயக்குவதை விட்டுவிட்டு குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே ரயில் இயக்கப்படுகிறது. அதுவும் பராமரிப்பு பணி மற்றும் இதர பணி என உள்ள ரயிலையும் ரத்து செய்யப்படுகிறது. திருச்சிக்கும், தஞ்சைக்கும் பஸ் போக்குவரத்து 5 நிமிடத்துக்கு ஒரு முறை இயக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பெரிதும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். கட்டணமும் குறைவு. எனவே திருச்சிக்கும் தஞ்சைக்கும் தொடர்ச்சியாக ரயில் இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்டுப்படுத்தலாம் என தெரிவித்துள்ளனர்.

Related Stories: