மேட்டூர் அணையை ஜூன் 12ம் தேதி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

தஞ்சை, மே 21: மேட்டூர் அணையை ஜூன் 12ம் தேதி திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மோகன் தலைமையில் நடந்தது. தேசியக்குழு உறுப்பினர் பழனிசாமி சிறப்புரையாற்றினார். எதிர்கால பணிகள் மற்றும் நடந்துள்ள பணிகள் குறித்து மாவட்ட செயலாளர் பாரதி பேசினார். கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக வரும் 1ம் தேதி தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணி முதல் திருப்பனந்தாள் வரை 25 இடங்களில் நடைபெறும் தொடர் முழக்க போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் தனது முழு ஆதரவை தெரிவிக்கிறது. தஞ்சை மாவட்ட விவசாயத்தை பாதுகாக்க ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் நிலவும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் கிராமப்புற விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். தொடர் மின்வெட்டை போக்கி தடையில்லா மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநிலக்குழு உறுப்பினர் திருஞானம், மாவட்ட துணை செயலாளர்கள் கல்யாணசுந்தரம், காசிநாதன், மாவட்ட நிர்வாகிகள் சந்திரகுமார், பக்கிரிசாமி, பாலசுந்தரம், தில்லைவனம், விஜயலட்சுமி, முகில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: