×

கொப்பரை தேங்காய் விலை கிலோ.ரூ.90க்கு ஏலம்

க.பரமத்தி, மே.21: கொப்பரை தேங்காய் விலை ஒரு கிலோவிற்கு ரூ.90ஏலம் போனது இரு வெவ்வேறு ஒன்றிய பகுதியகளான புன்னம் ஊராட்சி, புகழூர், வேலாயுதம்பாளையம்,நொய்யல், சேமங்கி, நடையனூர், மறவாபாளையம், தவிட்டுப்பாளை யம், திருக்காடுதுறை, உள் ளிட்ட 15க்கும் மேற்பட்ட ஊர்களில் விலையும் தேங்காய்களை உடைத்து காய வைத்து தங்களது தேவைக்கு எண்ணை எடு த்தது போக மீதம் உள்ள பருப்பினையும் சில விவசாயிகள் தங்களது தேங்காய்களையும் அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் திங்கள் தோறும் நடைபெறும் ஏலத்திற்கு கொண்டு செல்கின்றனர்.

அங்கு நேற்று கொப்பரை தேங்காய்க்காக நடந்த ஏலத்திற்கு சுமார் 382மூட்டைகளில் 17226கிலோ கொப்பரை தேங்காய் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது. கொப்பரை தேங்காய் ஒரு கிலோ சராசரி விலையாக ரூ.85, ஒரு கிலோ கொப்பரை தேங்காய் முதல் ரகம் அதிக விலையாக ரூ.90 ஏலம் போனது. கடந்த வாரத்தை விட ரூ.1வீழ்ச்சியடைந்துள்ளது. இதே போல தேங்காய்களுக்காக நடந்த ஏலத்தில் சுமார் 5929கிலோ எடையுள்ள 19,533தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. இதில் ஒரு கிலோ தேங்காய்கள் விலை குறைந்த விலையாக ரூ.20, ஒரு கிலோ தேங்காய் அதிக விலையாக ரூ.23, ஏலம் விடப்பட்டது. கடந்த வாரம் இதே விலையில் தான் மாற்றம் இல்லை. கடந்த ஒரு மாத காலமாக ஏலம் விலை வீழ்ச்சியடைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Tags :
× RELATED தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்