பொதுஇடத்தில் மது அருந்திய 3 பேர் கைது

புதுச்சேரி, மே 21: புதுவை, பாக்குமுடையான்பேட் பகுதியில் நள்ளிரவில் ரவுடிகள் தொல்லை அதிகரித்து வருவதாக போலீசுக்கு புகார் வந்தன. இதையடுத்து வடக்கு எஸ்பி ஜிந்தா உத்தரவின்பேரில் அங்கு இரவு ரோந்தில் கோரிமேடு போலீசார் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் அங்கு பொதுமக்களுக்கு இடையூறாக நின்று கொண்டு மது அருந்திய திருக்கனூர் சக்திவேல் (31), தர்மபுரி கணபதி (44), திலகர் நகர் விஜயபாபு (36) ஆகியோரை எஸ்ஐக்கள் கலையரசன், திருமுருகன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: