திண்டிவனம் நகராட்சியில் அனைவருக்கும் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி தீவிரம்

திண்டிவனம், மே 21: திண்டிவனம் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வீடு மற்றும் கடைகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க நகராட்சி ஆணையம் தவணை முறையில் திட்டம் தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து 16வது வார்டில் குடிநீர் இணைப்பு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வீடுகளுக்கு வழங்க நகராட்சி ஊழியர்கள் மூலம் பணி துவங்கியது. திண்டிவனம் நகராட்சியில் 33 வார்டுகள் செயல்பட்டு வருகிறது. சுமார் 20 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி மூலம் கட்டணம் செலுத்தி இதுவரை 4440 குடிநீர் இணைப்பு மட்டுமே பெறப்பட்டுள்ளது. வீட்டு குடிநீர் இணைப்பு இல்லாத மக்கள் தெருவில் குழாயில் வரும் தண்ணீரை பிடித்து பயன்படுத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

இதனால் முழு தொகை செலுத்தி குடிநீர் இணைப்பு பெற முடியாமல் ஏழை எளிய மக்கள் குடிநீருக்காக  தவித்து வருகின்றனர். இதனால் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான இதர கட்டணங்களை தவணை முறையில் நகராட்சிக்கு வீட்டு உரிமையாளர்களிடம் பெற்றுக் கொள்ளப்படும். இவர்கள் வீட்டு வரி செலுத்தும் பொழுது இந்த தவணைத் தொகையை செலுத்தலாம். ஆகையால் நகராட்சி பகுதியில் உள்ள வீட்டுக் குடிநீர் இணைப்பு பெறாத அனைத்து பொதுமக்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு தங்களது வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு பெற்றுக்கொள்ளலாம் என நகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் நகரபகுதியில் உள்ள அனைத்து பொது குழாய்களும் விரைவில் துண்டிப்பு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

Related Stories: