விவசாயி பரிதாப பலி: ஹெல்மெட் அணிந்திருந்ததால் தப்பித்த வாலிபர்

கள்ளக்குறிச்சி, மே 21: சங்கராபுரம் அடுத்த வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டராமன்(55), விவசாயி. இவர் தனது பைக்கில் நேற்று சூளாங்குறிச்சி கிராமத்தில் இருந்து வளையாம்பட்டு கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தார். பழையசிறுவங்கூர் காந்திநகர் வளைவுபாதையில் எதிரே நூரோலை கிராமத்தை சேர்ந்த அரசன் மகன் அன்பு(27). இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள பைனான்ஸ் கம்பெனியில் கலெக்ஷன் செய்யும் வேலை செய்து வருகிறார். இவர் தனது பைக்கில் கள்ளக்குறிச்சி பைனான்ஸ் கம்பெனிக்கு செல்லும் போது எதிர்பாராவிதமாக கோதண்டராமன் பைக் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், கோதண்டராமன் தூக்கி வீசப்பட்டதில் தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

   
Advertising
Advertising

 கோதண்டராமன் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வைத்திருந்ததாகவும், விபத்து ஏற்படுத்திய அன்பு ஹெல்மெட் அணிந்து இருந்ததால் தலையில் காயம் ஏற்படவில்லை. வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டு உயிர் தப்பினார் என போலீசார் தெரிவித்தனர். அன்புவை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்கு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து கோதண்டராமன் உடலை கைபற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: