கல்லூரி மாணவி மயங்கி விழுந்து சாவு

விழுப்புரம், மே 21: விழுப்புரத்தில் ரோட்டில் நடந்து சென்ற கல்லூரி மாணவி திடீரென மயங்கி விழுந்து இறந்தார். விழுப்புரம்  வண்டிமேடு பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன் மகள் ரஞ்சனி (19). இவருடைய  பெற்றோர் சென்னையில் தங்கியிருந்து காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர்.  இதனால் ரஞ்சனி வண்டிமேடு பகுதியில் உள்ள தனது மாமா சுந்தரமூர்த்தியின்  வீட்டில் தங்கியிருந்து விழுப்புரம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில்  பி.எஸ்.டபிள்யு முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று  விழுப்புரம் கே.கே.நகரில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்று பிரார்த்தனை  செய்து முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றார்.

Advertising
Advertising

அப்போது திடீரென  மாணவி ரஞ்சனி மயக்கம்போட்டு கீழே விழுந்தார். உடனே அக்கம், பக்கத்தினர்  விரைந்து சென்று ரஞ்சனியை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள்,  ஏற்கனவே ரஞ்சனி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இவர் எப்படி இறந்தார் என்பது  குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர். இச்சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

Related Stories: