×

அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

விருத்தாசலம், மே 21: விருத்தாசலத்தில் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் அருகேயுள்ள முடப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம் மகன் சிவநாதன் (41). இவர் விருத்தாசலம் அரசு பேருந்து பணிமனையில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று விருத்தாசலத்தில் இருந்து கொடுக்கூர் வரை செல்லும் அரசு பேருந்தை ஓட்டிச் சென்றார். ஆலடியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் இளையகுமார் (31) என்பவர் நடத்துனராக பணியில் இருந்தார். கடைவீதி பாலக்கரை பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து சென்ற போது, விருத்தாசலம் தீர்த்தமண்டபத்தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் வினாயகமூர்த்தி (39) மற்றும் அவருடன் 3 பேர் பைக்கில் வந்து பேருந்தின் குறுக்கே பைக்கை நிறுத்தியுள்ளனர்.

இதனால் பேருந்தை எடுக்க முடியாத நிலையில் சிவநாதன் அவர்களிடம் ஏன் பேருந்தின் முன்பு பைக்கை நிறுத்தியுள்ளீர்கள் எனக் கேட்டதற்கு, அவர்கள் 3 பேரும் சிவநாதனை அசிங்கமாக திட்டியதோடு மட்டுமல்லாமல், பேருந்துக்குள் ஏறி பணியில் இருந்த ஓட்டுநர் சிவநாதன் மற்றும் நடத்துனர் இளையகுமாரை ஆகிய 2 பேரையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த சிவநாதன், இளையகுமார் ஆகிய 2 பேரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சிவநாதன் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது மற்றும் போலீசார், வினாயகமூர்த்தி உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிந்து சிவநாதனை கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள 3 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags : persons ,Government bus driver ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...