×

அரிகரபுத்திர சாமி கோயிலில் வைகாசி விசாக உற்சவம்

சிதம்பரம், மே 21: சிதம்பரம்  வட்டம் சி.சாத்தமங்கலம் கிராமத்தில் உள்ள அரிகரபுத்திர சாமி கோயிலில் வைகாசி விசாக உற்சவம் மற்றும்  கும்பாபிஷேக இரண்டாம் ஆண்டு நிறைவு விழா நடந்தது. இதையொட்டி கோயிலில் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடந்தது.  பின்னர் அன்ன பிரசாதம்  படைக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. இரவு திருக்கல்யாண  நிகழ்ச்சி நடந்தது. சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான  பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாண நிகழ்ச்சி  மற்றும் பூஜைகளை சிதம்பரம் செல்வரத்ன தீட்சிதர் குழுவினர் செய்தனர்.  பின்னர் சாமி வீதியுலா நடந்தது.  விழா ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தாக்கள் மற்றும் விழாக்குழுவினர்  செய்திருந்தனர்.

Tags : Ariyakaputhiram Samy Temple ,
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது