×

நெய்வேலி சுரங்கத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் மீது சரமாரி தாaக்குதல்

நெய்வேலி, மே 21: நெய்வேலி முதலாவது சுரங்க விரிவாக்கத்தில் பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்புப்படை வீரரை தாக்கிய ஒப்பந்த தொழிலாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம்-22ல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பூரணச்சந்திரா (53). இவர் மத்திய தொழிலக பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மதியம் என்எல்சி முதலாவது சுரங்கம் விரிவாக்கம் கன்வேயர் யார்டில் பணியில் இருந்த போது ஏதோ சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து சத்தம் வந்த இடத்துக்கு சென்று பார்வையிட்டு யார் சத்தம் போட்டது என்று கேட்டுள்ளார்.

அப்போது அங்கு பணியில் இருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் சித்தாலிக்குப்பம் ராஜகோபால் மகன் ரவி (45), கல்லுக்குழி கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் மகன் மணிகண்டன் (35) ஆகிய 2 பேரும் பூரணச்சந்திராவிடம் வேண்டுமென்று தகராறு செய்து தரையில் கிடந்த கல்லை எடுத்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் என்எல்சி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து பூரணச்சந்திரா கொடுத்த புகாரின் பேரில் டவுன்ஷிப் சப்-இன்ஸ்பெக்டர் பலராமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து ரவி, மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மத்திய தொழில் பாதுகாப்புபடை வீரர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Central Industrial Security Force ,mine ,Neyveli ,personnel ,
× RELATED பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க கொடி அணிவகுப்பு விழிப்புணர்வு பேரணி