×

திருவண்ணாமலையில் பணியிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயரிழப்பு

திருவண்ணாமலை, மே 21: திருவண்ணாமலையில் பவுர்ணமி நாளன்று பணியிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார். திருவண்ணாமலை முத்துவிநாயகர் கோயில் தெருவில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் பி.வடிவேல்(52), இவர் வேட்டவலம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி பவுர்ணமியை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக திருவண்ணாமலை குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, சிவன்படத்ெதரு அய்யங்குளம் அருகே பணியிலிருந்த போது, திடீரென வடிவேலுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வடிவேலு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, வடிவேலுவின் மகன் சவுந்தர்ராஜன் திருவண்ணாமலை டவுன் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்த வடிவேலுக்கு சுந்தரவள்ளி என்ற மனைவியும், சவுந்தர்ராஜன் என்ற மகனும், சரண்யா, சுகண்யா என்ற மகள்களும் உள்ளனர்.

Tags : Special Assistant Inspector ,Tiruvannamalai ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 இடங்களில்...