சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக கேட்பாரற்று நிறுத்திய வாகனங்கள் பறிமுதல்

சென்னை: சென்னையில் உள்ள பல சாலைகளில் தனியாருக்கு சொந்தமான பழுதடைந்த வாகனங்கள் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், தினசரி காலை, மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, சாலையோரம் கேட்பாரற்று நிறுத்தப்பட்டள்ள வாகனங்களை அகற்றினாலே, பாதியளவு போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும், என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, சென்னையில் உள்ள சாலைகளில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை பறிமுதல் செய்ய போக்குவரத்து போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

அதன்பேரில், நேற்று காலை முதல் சாலை ஓரங்களில் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக, வண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையோரம் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை போக்குவரத்து போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். அதேபோல் மாநகரம் முழுவதும் அந்தந்த பகுதியில்  உள்ள போக்குவரத்து போலீசார், சாலையோரம் உள்ள கேட்பாரற்ற வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். மேற்கண்ட வாகனங்களுக்கு உரிமை ேகாரி வரும் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சென்னையில் ஓரளவு போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: