தேரியூர் முத்தாரம்மன் கோயில் கொடை விழா

உடன்குடி,மே 21: உடன்குடி தேரியூர் முத்தாரம்மன் கோயில் வருடாந்திர கொடை விழா 20ம் தேதி மாலை 6மணிக்கு 1008 திருவிளக்கு பூஜையுடன் தொடங்கியது. நள்ளிரவு 12மணிக்கு சிறப்பு பூஜையுடன் அம்மன் வீதி உலா நடந்தது. இன்று (21ம் தேதி) காலை 6மணிக்கு உடன்குடி கண்டுகொண்ட விநாயகர் கோயிலில் இருந்து மேளதாளத்துடன்  பால்குடம் எடுத்து வருதல், நண்பகல் 12மணிக்கு சிறப்பு பூஜையுடன் அம்மன் வீதி உலா, இரவு 8மணிக்கு வில்லிசை, இரவு 9மணிக்கு முளைப்பாரி ஊர்வலம், நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சப்பரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் வழங்குதல், 22ம் தேதி காலை 8மணிக்கு மெகா கோலப்போட்டி, 10மணிக்கு வில்லிசை, நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அம்மன் வீதி உலா வருதல், தொடர்ந்து சுவாமிகள் மஞ்சள் நீராடுதல், மாலை 6மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் பைரவருக்கு சிறப்பு பூஜை, நள்ளிரவு 12மணிக்கு சிறப்பு பூஜையுடன் அம்மன் வீதி உலாவும் நடக்கிறது. வரும் 23ம் தேதி காலை 8மணிக்கு கொடை விழா நிறைவு பூஜையை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. ஏற்பாடுகளை கொடை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: