சாத்தான்குளம் கோயில் கொடை விழா துவக்கம்

சாத்தான்குளம், மே 21: சாத்தான்குளம் குலசைரஸ்தா உச்சினிமகாளியம்மன் கோயில் கொடை விழா நேற்று (20ம் தேதி) துவங்கியது. நேற்று காலை 9 மணிக்கு கும்பாபிஷேகம்,  அம்மனுக்கு அபிஷேக   ஆராதனை, இரவு 9 மணிக்கு குடியழைப்பு, அலங்கார பூஜை நடந்தது. 2ம் நாளான இன்று (21ம் தேதி)   காலை 9 மணிக்கு அழகம்மன் கோயிலில் இருந்து அம்பாளுக்கு தீர்த்தம்   மற்றும் பால்குடம் எடுத்து வருதல், பகல் 12 மணிக்கு உச்சிகாலபூஜை, மஞ்சள்   நீராடுதல், கும்பம் வீதியுலா வருதல், இரவு 9 மணிக்கு அம்பாளுக்கு அலங்கார   பூஜை, அக்னிசட்டி வீதியுலா வருதல், இரவு 12 மணிக்கு சாமக்கொடை, அம்பாளுக்கு   பொங்கலிடுதல் உள்ளிட்டவைகள் இடம் பெறுகின்றன. ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: