இளம்பெண் மர்மச்சாவு

ஓட்டப்பிடாரம், மே 21: பசுவந்தனை அருகே மரத்தில் தூக்கிட்ட நிலையில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்துகிடந்தது குறித்து போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர். ஓட்டப்பிடாரம் அருகே சுந்தரலிங்கம் காலனியை சேர்ந்தவர் இசக்கிமுத்து (36). இவரது மனைவி தங்கமாரி (32). இவர்களுக்கு 2 மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் குடும்பத்தினருடன் கடந்த 2 மாதங்களாக பசுவந்தனை அருகே வடக்கு ஆரைக்குளத்தில் ஒரு தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்து அங்குள்ள கோழி பண்ணையை பராமரித்து வந்தனர்.  

Advertising
Advertising

 நேற்று முன்தினம் இசக்கிமுத்து ஓட்டுப்போடுவதற்காக சொந்த ஊருக்கு சென்றார். வீட்டில் தங்கமாரி மற்றும் குழந்தைகள் இருந்தனர். மதியம் வீட்டுக்கு வந்த இசக்கிமுத்து மனைவி தங்கமாரி இல்லாதது பற்றி குழந்தைகளிடம் விசாரித்தார். தோட்டத்துக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றவர் வெகுநேரமாகியும் வரவில்லை என்றனர். இதையடுத்து இசக்கிமுத்து தனது மனைவியை தேடிச்சென்றபோது அங்குள்ள மரத்தில் தங்கமாரி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் பசுவந்தனை போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி தீவிர விசாரித்து வருகின்றனர்.

Related Stories: