பிளஸ் 1 தேர்வு விடைத்தாள் நகல் ஆன்லைனில் இன்று பெறலாம்

தூத்துக்குடி, மே 21: கடந்த மார்ச் மாதம் பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள்கள் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் இன்று (21ம் தேதி) காலை 10 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவுசெய்து விடைத்தாளின் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்தபிறகு மறுகூட்டலுக்கு அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் Application for Re totaling/ Re valuation என்ற தலைப்பினை Click செய்து தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.  

Advertising
Advertising

இவ்விண்ணப்ப படிவத்தை நிரப்பி இரு நகல்கள் எடுத்து இன்று (21ம் தேதி) பிற்பகல் 2 மணி முதல் நாளை மறுதினம் (23ம் தேதி) மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கான கட்டணத்தை முதன்மை கல்வி அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும். மறுகூட்டல் உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூ.305 கட்டணமாகும். பிற பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.205 ஆகும். மறுமதிப்பீட்டிற்கு பாடம் ஒவ்வொன்றிற்கும் ரூ.505 கட்டணம் செலுத்த வேண்டும். இத்தகவலை அரசு தேர்வுகள் இயக்கக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Related Stories: