கோவில்பட்டியில் லட்சுமியம்மாள் நினைவு கோப்பை அகில இந்திய ஹாக்கி போட்டியில் ரயில்வே அணிகள் வெற்றி

கோவில்பட்டி, மே 19: கோவில்பட்டியில் லட்சுமியம்மாள் நினைவு கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டியில் நேற்று நடந்த 3வது நாள் போட்டியில் செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரயில்வே அணியும் மற்றொரு போட்டியில் சவுத் ரயில்வே அணியும் வெற்றி பெற்றன. கோவில்பட்டியில் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான அகில இந்திய அளவிலான ஹாக்கி போட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த முதலாவது போட்டியில் செகந்தராபாத் சவுத் சென்ட்ரல் ரயில்வே அணியுடன் சென்னை ஐசிஎப் அணியினர் விளையாடினர். இதில் செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரயில்வே அணி 3:1 எனும் கோல்கணக்கில் வெற்றி பெற்றனர்.

இதையடுத்து நடந்த 2வது போட்டியில் சென்னை தெற்கு ரயில்வே அணியுடன் கோவில்பட்டி லட்சுமியம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியினரும் விளையாடினர். இதில் சென்னை தெற்கு ரயில்வே அணி 6:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.  பின்னர் நடந்த 3வது போட்டியில் மும்பை ஆல் இந்தியா கஸ்டம்ஸ் சிஎஸ்டி அணியினருடன் சென்னை இந்திய வங்கி அணியினர் மோதினர். மும்பை அணி 3:2 கோல் கணக்கில் வென்றது. 4ம் நாளான இன்று (19ம் தேதி) நடக்கும் முதல் போட்டியில் ஈஸ்ட் கோஸ்ட் ரயில்வே புவனேஷ்வரர் அணியுடன் சிஐஎஸ்எப் சண்டிகர் அணியினரும், 2வது போட்டியில் யூனியன் வங்கி மும்பை அணியுடன் கோவில்பட்டி லட்சுமியம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியினரும், 3வது போட்டியில் பெங்களூரு ஹாக்கி அசோசியேசன் பெங்களூரு அணியுடன் ஆல்இந்தியா கஸ்டம்ஸ் சிஎஸ்டி அணியினர் மோதுகின்றனர்.

Related Stories: