வைகாசி விசாகம் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

நெல்லை,  மே 19:  வைகாசி விசாகத்தையொட்டி நெல்லை முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று தரிசித்தனர். வைகாசி விசாகத் திருவிழா ஆண்டுதோறும் முருகன் கோயில்களில் வெகு விமரிசையாக நடந்து வருகிறது. இதன்படி இந்தாண்டுக்கான வைகாசி விசாகத்தையொட்டி நெல்லை மாநகரில் உள்ள பல்வேறு முருகன் கோயில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.  வற்றாத ஜீவநதியான தன்பொருநை எனப்படும் தாமிரபரணி பாய்ந்து வளம்கொழிக்கும் நெல்லை சீமையில் திருவுறுமாமமலை என பக்தர்களால் அழைக்கப்படும் நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக  திருவிழா கடந்த 8ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருவிழா தொடர்ந்து 11 நாட்கள் விமரிசையாக நடக்கிறது. இதையொட்டி திருவிழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான வைகாசி விசாகத் தினம் சிறப்பாக நேற்று (18) கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.  இதில் நெல்லை மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனர். இதனிடையே குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் ஓடினாலும் அதில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் நீராடி முருகனை வழிபட்டனர். விசாகத்ைத முன்னிட்டு குறுக்குத்துறை பகுதியில் உள்ள மதுக்கடைக்கு மட்டும் விடுப்பு அளிக்கப்பட்டது.

சாலைக்குமரன் கோயில்: நெல்லை சந்திப்பில் உள்ள வரலாற்றுச்சிறப்பு மிக்க பாளையஞ்சாலைக்குமார சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். இதே போல் நெல்லையப்பர் கோயிலில் ஆறுமுகர் சன்னதி, பாளை திரிபுராந்தீஸ்வரர் கோயில் முருகன் சன்னதி, பாளை மேலவாசல் சுப்பிரமணியசாமி கோயில், தச்சநல்லூர் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோயில் உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களிலும், முருகன் சன்னதியிலும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதையொட்டி காலை முதலே வருகைதந்த பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

Related Stories: