×

ஆரல்வாய்மொழியில் பரிதவித்த ஆதரவற்ற ஆந்திர மூதாட்டி மருத்துவமனையில் சேர்ப்பு

ஆரல்வாய்மொழி, மே 19: ஆரல்வாய்மொழி சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி முதியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநிலத்தவர்களை காணமுடிகிறது, அவர்கள் வட மாநில மொழியில் பேசுவதால் யார் என்று தெரியாமலும், பின்னர் எங்கு சென்றார்கள் என்பது தெரியாமலும் இருக்கிறது. இந்நிலையில் ஆரல்வாய்மொழி குமாரபுரம் இணைப்பு சாலையில் உள்ள தொழிற்பேட்டை அருகே சுமார் 70 வயது மூதாட்டி ஒருவர் நடக்க முடியாமல் தள்ளாடி தள்ளாடி வந்து கொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில் அவர் நடக்க முடியாமல் தொழிற்பேட்டை முன்பாக மிகவும் சோர்வாக அமர்ந்து கொண்டார். இதனை தொழிற்பேட்டையில் உள்ள ஒரு நிறுவனத்தை சார்ந்த முத்துகுமார் என்பவர் பார்த்து சக ஊழியர்களின் உதவியுடன் முதாட்டியை காற்றோட்டமான பகுதிக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

அப்போது அவர் தான் ஆந்திராவை சார்ந்தவர் என்றும், தனக்கு மிகவும் சோர்வாக உள்ளதாகவும் தெலுங்கில் தெரிவித்தார். ஆனால் அவர்களுக்கு மொழி தெரியாத நிலையில் மூதாட்டி மிகவும் சோர்வாக உள்ளதை உணர்ந்து அவருக்கு உணவு வாங்கி கொடுத்தனர். ஆனால் மூதாட்டி சாப்பிட கூட முடியாத நிலையில் இருந்ததால் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியிடம் விசாரித்தனர். ஆனால் அவர் மிகவும் பலவீனமாக கானப்பட்டார். இதையடுத்து உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் மூதாட்டியை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி இப்பகுதி பொதுமக்கள் கூறும்போது: ஆரல்வாய்மொழி அருகே காவல்கிணறு - கன்னியாகுமரி நான்கு வழி சாலை செல்கின்றது. இவ்வழியாக வாகனங்களில் வரும் வடமாநிலத்தவர் சிலர் முதியவர்களையும் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களையும் இறக்கி விட்டுவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் அவர்கள் நடந்தே குமாரபுரம் ஆரல்வாய்மொழி இணைப்பு சாலை வழியாகவோ, அல்லது காவல் கிணறு - ஆரல்வாய்மொழி நெடுஞ்சாலை வழியாகவோ ஆரல்வாய்மொழி வந்து விடுகின்றனர். இந்த மூதாட்டியும் ஆந்திராவை சார்ந்தவர் என்பதால் குடும்பத்தார் எவரேனும் நான்கு வழிச்சாலையில் விட்டு சென்றார்களா அல்லது கன்னியாகுமரிக்கு குடும்பத்துடன் வந்த போது வழி தவறி
வந்தாரா எனத் தெரியவில்லை எனக் கூறினர்.

Tags : Anantha Maidan ,hospital ,Arulualam ,
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...