கீழ்பவானி பாசன பகுதிகளில் எள் அறுவடை பணி தீவிரம்

காங்கயம், மே19:திருப்பூர் மாவட்டத்தில் கீழ்பவானி பாசனத்தின் மூலம் திறக்கப்பட்ட தண்ணீரை கொண்டு பயிரிப்பட்டிருந்த பகுதியில் எள் அறுவடை பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். காங்கயம் தாலூகாவில்  கீழ்பவானி கால்வாய் மூலம் 18 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறும் பகுதிகள் ஆகும். நெல் அறுவடை முடிந்து இரண்டாம் பகுதிக்கு  முறை வைத்து திறக்கப்பட்ட தண்ணீரை கொண்டு நத்தக்காடையூர், முத்தூர், வெள்ளகோவில் பகுதிகளில் சுமார் 2000 ஏக்கர் பரப்பில் விவசாயிகள் எள் பயிரிட்டிருந்தனர்.ஒவ்வொரு வருடமும் இரண்டாம் போகத்துக்கான நீர் திறப்பில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் என்ற அளவில் பயிரிடப்படும் எள், இந்த ஆண்டு போதிய தண்ணீர் பற்றாக்குறையால் 2 ஆயிரம் ஏக்கர்  பரப்பில் மட்டுமே விவசாயம் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது கீழ்பவானி பாசனப்பகுதிகளில் அறுவடை துவங்கியுள்ள நிலையில் ஒரு குவின்டால் எள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் ரூ.12 ஆயிரம் விலைக்கு வாங்கப்படுகிறது. விலை உயர்த்தி வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: