×

ஊட்டி நகரை இணைக்கும் மாற்றுப்பாதை பழுது

ஊட்டி, மே 19: ஊட்டியில். கோடைசீசன் தொடங்கி உள்ள நிலையில் நகருக்குள் வாகன நெரிசல் ஏற்படாமல் இருக்க, சுற்றுலா பயணிகள் எளிதாக நகருக்குள் வர போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, குன்னூர் வழித்தடத்தில் வரும் அனைத்து வாகனங்களும் லவ்டேல் சந்திப்பில் இருந்து காந்திநகர், ஸ்டெர்லிங், மஞ்சனக்கொைர வழியாக பெர்ன்ஹில் வந்தடைந்து அங்கிருந்து நகருக்குள் வாகனங்கள் செல்லும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாகனங்கள் அதிகம் வந்தால், இவ்வழித்தடத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. இம்முறையும் அதேபோல், வாகனங்கள் அனைத்தும் லவ்டேல் சந்திப்பில் இருந்து மஞ்சனக்கொரை வழியாக ஊட்டி நகருக்கு திருப்பிவிடப்படுகிறது. ஆனால், இச்சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. பெரும்பாலான இடங்களில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. சாலையோரங்களில் முட்புதர்களும் வளர்ந்துள்ளன. இதனால், இவ்வழித்தடத்தில் வாகனங்களை ஓட்டிச் செல்ல சுற்றுலா பயணிகள் மற்றும் ஓட்டுநர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, இச்சாலையை போர்க்கால அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும். முதற்கட்டமாக பள்ளங்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : city ,Ooty ,
× RELATED சினிமா ஸ்டண்ட் நடிகர் வீட்டில் திருட்டு