கோவை நகர ரோடுகளில் போக்குவரத்து சிக்னல் குறியீடு புதுப்பிக்க வலியுறுத்தல்

கோவை, மே 19: கோவை நகரில், குறுகலான ரோடு, வாகன பெருக்கம், அதிவேகத்தினால் விபத்து அதிகரித்து வருகிறது. மாதந்ேதாறும் விபத்துகளில் 25 முதல் 35 பேர் வரை இறக்கின்றனர். ஒவ்வொரு மாதமும் விபத்தினால் 400 முதல் 450 பேர் வரை கை, கால், தலை காயத்தினால் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. அதிவேகம், கவனக்குறை, தரமற்ற ரோடுகளால் விபத்து ஏற்பட்டு வருகிறது. நகரில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்தும் விபத்துகளின் எண்ணிக்கை குறையவில்லை. பஸ், லாரி, சரக்கு வாகனங்களில் செல்பவர்கள் விதிமுறை மீறி செல்வதாலும், செல்போன்களை பேசிய படி வாகனங்களை இயக்குவதாலும் விபத்து ஏற்படுவதாக தெரிகிறது.  மார்க்கெட், வணிக வளாகம் பகுதியில் கனரக வாகனங்கள் குறிப்பாக லாரிகள் அதிகமாக வந்து செல்கிறது. முக்கிய ரோடுகளில் வாகனங்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து செல்லவேண்டியுள்ளது.

நெருக்கடி, அவசரம் காரணமாக வாகனங்கள் வேகமாக செல்லும் போது விபத்து ஏற்படுவதாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கூறுகின்றனர். அவிநாசி ரோடு, திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம் ரோட்டில் அதிகளவு விபத்து ஏற்பட்டு வருகிறது. காந்திபுரம், பீளமேடு, சிங்காநல்லூர், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகள் அதிக விபத்து நடந்த அபாய பகுதியாக (பிளாக் ஸ்பாட்) அறிவிக்கப்பட்டுள்ளது. நகரில் விபத்து அபாய பகுதிகள் அறிவிப்பு பலகையில் எச்சரிக்கைக்காக வைக்கப்பட்டிருந்தது. விபத்து நடந்த இடத்திலும் அபாய குறியீடு எழுதப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அபாய எச்சரிக்கை, விபத்து குறியீடு அறிவிப்பு அரிதாகி விட்டது. பல இடங்களில் ரோடுகளில் வேக தடை வைக்கப்படவில்லை.

நோ என்ட்ரி, சிக்னல் எல்லை கோடு போன்றவை சரியாக குறிப்பிடப்படவில்லை. சில தானியங்கி சிக்னல்கள் முறையாக செயல்படுவதில்லை, போக்குவரத்து போலீசார் சில நேரங்களில் சிக்னல் பகுதியில் பணியாற்றுவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் விதிமுறை மீறி செல்வது வழக்கமாகி விட்டது. நோ என்ட்ரி, ஸ்டாப் லைன், இடது வலது புறம் திரும்பு அறிவிப்புகள் மாயமாகி விட்டதால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். போக்குவரத்து குறியீடு, ஸ்டாப் லைன் புதுப்பிப்பு பணிகளை முறையாக நடத்தவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Related Stories: