×

சூலூர் சட்டமன்ற ஓட்டு சாவடிகளில் உப்பு கரைசல்

கோவை, மே 19:கோவை சூலூர் சட்டமன்ற இடைதேர்தல் ஓட்டு பதிவு இன்று நடக்கவுள்ளது. 324 ஓட்டு சாவடிகளில் ஓட்டு பதிவுக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் ஓட்டு மெஷின்கள், கட்டுபாட்டு கருவிகள் ஓட்டு சாவடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று வெயில் தாக்கல் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வறண்ட வானிலையும், வெப்ப சலனத்தால் மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. வெயில் தாக்கத்தால் ஓட்டு பதிவு குறைவதை தடுக்க சாமியானா பந்தல் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஓட்டு சாவடியில் மர நிழல் இருந்தால் பந்தல் தேவையில்லை. மரம் இல்லாத ஓட்டு சாவடிகளில் பந்தல் கட்டாயம் அமைக்கவேண்டும். வாக்காளர்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் வரிசைப்படி, ஓட்டு சாவடி அறைக்கு அருகேயுள்ள அறையில் அமர வைக்கவேண்டும். முறைப்படி ஓட்டு போட அனுமதிக்கவேண்டும். வெயில் அதிகமாக இருப்பதாக கூறி வாக்காளர்கள் யாரும் திரும்பி செல்லும் நிலையிருக்கூடாது. ஓட்டு சாவடி முன் குடிநீர் தொட்டி அல்லது குடிநீர் கேன் வைத்திருக்கவேண்டும். வாக்காளர்கள் மயக்கி விழும் நிலை ஏற்பட்டால் அவர்களை உடனடியாக மீட்க உப்புகரைசல் பாக்கெட்டுகளை அனைத்து ஓட்டு சாவடிகளிலும் வைத்திருக்கவேண்டும். முக்கிய பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் இருக்கவேண்டும் என தேர்தல் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கதகளி நாட்டியம் பாலக்காடு மாவட்டம்  கிருஷ்ணபுரம் அருகே உள்ள பெருமாங்கோடு விஷ்ணு கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சாஸ்தா கோயில் பிரதிஷ்டா தினவிழாவையொட்டி குசேலவிரதம் என்ற தலைப்பில் கதகளி நாட்டியம் நேற்று முன்தினம் கோயில் கலையரங்கில் நடந்தது.

Tags : assembly booth booths ,
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு