பந்தல் காய்கறிகள் விலையேற்றம்

திருப்பூர்,மே 19:  திருப்பூர், நல்லூர், அல்லாலபுரம், நொச்சிபாளையம், கோவில்வழி, பெருந்தொழுவு, மங்கலம், அணைப்பாளையம் உட்பட பல்வேறு கிராமங்களைச்சார்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தக்காளி, கத்திரி, வெங்காயம், பாகற்காய், பீர்க்கன், அவரைக்காய், சுரைக்காய், அவரை உட்பட பந்தல் காய்கறிகள் அதிகளவு பயிரிட்டள்ளனர். கடந்த சில மாதங்களாக எதிர்பார்த்த மழை இல்லாததால் பந்தல் காய்கறிகளின் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், தென்னம்பாளையம் உழவர் சந்தைக்கு கடந்த சில நாட்களாக பந்தல் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. பாகற்காய் கிலோ 20க்கு விற்பனையானது. தற்போது ரூ.60க்கு விற்கப்படுகிறது.  பீர்க்கன்காய் ரூ.15 முதல் ரூ.20 விற்றது. தற்போது ரூ.50க்கு விற்கப்படுகிறது. மலை காய்கறிகள் இஞ்சி ரூ.90 விற்றது தற்போது ரூ.150க்கும், பீன்ஸ் ரூ.60 க்கு விற்றது ரூ.90க்கு விற்கிறது. வைகாசி மாதம் துவங்கியுள்ளதால் முகூர்த்த நாட்கள், கிரஹபிரவேசம் உட்பட சுப நிகழ்ச்சிகள் நடக்க இருப்பதால் காய்கறிகளின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Related Stories: