டி.நல்லிக்கவுண்டன்பாளையத்தில் சாலை சீரமைக்க மக்கள் கோரிக்கை

பொள்ளாச்சி, மே 19:   பொள்ளாச்சி அருகே முத்தூரிலிருந்து டி.நல்லிக்கவுண்டன்பாளையம் கிராமத்துக்கு செல்லும் ரோட்டை, 10ஆண்டுகளாக சீரமைக்கப்படாத அவலத்தால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர். பொள்ளாச்சி அருகே டி.நல்லிக்கவுண்டன்பாளையம் கிராமத்துக்கு செல்லும் பலர், பாலக்காடு முத்தூரிலிருந்து துவங்கும் ரோட்டையே அதிகம் பயன்படுத்துகின்றனர். விவசாய தோட்டங்கள் நிறைந்த இந்த வழித்தடத்தில் வாகன போக்குவரத்து மட்டுமின்றி,  மக்கள் நடமாட்டம் தொடர்ந்துள்ளது. ஆனால், சுமார் 10ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக போடப்பட்ட ரோட்டிலிருந்து, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு  ஜல்லிபெயர்ந்து வர ஆரம்பித்தது. பின் நாளடைவில் ஆங்காங்கே பெரிய அளவில் பள்ளமானது. மழைக்காலத்தில் அந்த ரோட்டில் தண்ணீர் தேங்குவதுடன், சேறும் சகதியுமாக காணப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு பேட்ஜ் ஒர்க் மேற்கொண்டாலும், தற்போது அந்த ரோடு பெரும்பாலான இடங்களில் குண்டும் குழியுமாக, கரடு முரடான பாதைபோல் காணப்படுகிறது. சுமார் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த ரோட்டின் பெரும்பகுதியில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வருவோரும், நடந்து செல்லும் மக்களும் அவதிப்படுகின்றனர். பிற கிராமத்துக்கு மட்டுமின்றி, விவசாய தோட்ட பகுதிகளுக்கு செல்லும் பிரதான ரோட்டை சீரமைத்து புதுபிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், புதிதாக ரோடு போடுவதற்கான எந்த நடடிக்கையும் இதுவரை எடுக்காமல் அதிகாரிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Related Stories: