மங்கலம் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு பேரணி

சோமனூர், மே 19: சூலூர் சட்டமன்றத் தொகுதியில் இன்று நடக்கும் இடைத்தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மங்களம் காவல் துறையினர் சார்பில் கொடி அணிவகுப்பு பேரணி நடந்தது.

சூலூர் சட்டமன்றத் தொகுதி உள்ளிட்ட 4 தொகுதிகளில் இன்று(19ம் தேதி) இடைத் தேர்தல் நடக்கிறது. இதில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மங்கலம் காவல் துறையினர் சாமளாபுத்தில் நேற்று கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினர். இதில் திருப்பூர் எஸ்பி.கயல்விழி தலைமையில் ஏராளமான போலீசார் பேரணியாக சென்றனர். இப்பேரணியில், நாமக்கல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன், பல்லடம் டிஎஸ்பி முத்துசாமி, மங்கலம் காவல்துறை ஆய்வாளர் நிர்மலாதேவி, கருமத்தம்பட்டி ஆய்வாளர் சிவக்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சோமனூரை அடுத்த சாமளாபுரம் ஏவிஎடி பள்ளி முன்பு துவங்கி இப்பேரணி, ஈஸ்வரன் கோவில் வழியாக இந்த அணிவகுப்பு பேரணி சாமளாபுரம், வாழைத்தோட்டத்து  அய்யன்கோவில் பிரிவு, ராம்நகர், சாமளாபுரம் ஹனுமன் கோவில் விதி வழியாக மீண்டும் ஏவிஎடி பள்ளி அருகே முடிந்தது.இந்த பேரணியின் போது வாக்காளர்கள் தங்களுடைய வாக்குச்சாவடிகளுக்கு சென்று அச்சமின்றி வாக்களிக்க வேண்டும், கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.

Related Stories: