பழநி நகராட்சியில் விபத்து ஏற்படுத்தாத டிரைவருக்கு தங்க பதக்கம் நிர்வாக ஆணையரகம் அறிவிப்பு

பழநி, மே 19: விபத்துகள் ஏற்படுபடுத்தாத பழநி நகராட்சி டிரைவர்களுக்கு தங்க பதக்கம் வழங்குவதாக நகராட்சி நிர்வாக ஆணையரகம் அறிவித்துள்ளது. மதுரை மண்டலத்திற்குட்பட்ட 10 நகராட்சிகளில் 18 டிரைவர்கள் பணிக்காலத்தில் 20 ஆண்டுகள் மாசற்ற முறையில் விபத்துகள் ஏதும் ஏற்படுத்தாமல் பணியாற்றி உள்ளனர். இவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் தங்கப்பதக்கம், நற்சான்று வழங்குவதாக நகராட்சி நிர்வாக ஆணையரகம் அறிவித்துள்ளது. இதன்படி மதுரை மண்டலத்திற்குட்பட்ட திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி நகராட்சியில் டிரைவர்களாக 20 ஆண்டுகள் விபத்துகள் ஏற்படுத்தாமல் பணியாற்றிய மணிகண்டன், அப்துர் காதர் ஒலி ஆகியோருக்கு தங்கப்பதக்கம், நற்சான்று வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை நகராட்சி ஆணையர், ஊழியர்கள் பாராட்டி வாழ்த்தினர். தவிர, மதுரை மண்டலத்திற்குட்பட்ட திருமங்கலம், மேலூர், உசிலம்பட்டி, கம்பம், சின்னமனூர், பெரியகுளம், காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் நகராட்சிகளை சேர்ந்த 16 டிரைவர்களுக்கும் தங்கப்பதக்கம், நற்சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.

Related Stories: