×

கோடை காலத்தில் பழங்கள் விற்பனை சரிவு

தேவாரம், மே 19: உத்தமபாளையம் தாலுகாவில் கம்பம், கூடலூர், சின்னமனூர், தேவாரம், ஓடைப்பட்டி, கோம்பை, உத்தமபாளையம், பண்ணைப்புரம்  உள்ளிட்ட ஊர்களில் அதிக அளவில் திராட்சை, மாதுளை, ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களை விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. பொதுமக்களால் மாற்று உணவு பழக்க வழக்கங்களில் பழங்கள் விற்பனை முக்கிய இடத்தை பெற்றுள்ளன. தற்போது கோடை வெப்பம் கொளுத்துவதால் நிழலுக்கு ஒதுங்கும் மக்கள் அதிக அளவில் கோடையை குளிர்விக்கும்  குளிர்பானங்கள், கூழ், மோர், வெள்ளரிக்காய், தர்ப்பூசணி உள்ளிட்டவற்றை வாங்குகின்றனர். இதனால் பழங்கள் விற்பனை சரிந்துள்ளன. இதற்கு காரணம் கோடை வெப்பம் என்றாலும், தற்போதைய நிலையில் வெப்பத்தை தணித்திட உடனடி தேவையாக உள்ள குளிர்பானங்களையும், இயற்கை உணவுபொருட்களையுமே மக்கள் விரும்புகின்றனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், `` குளிர்பானங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. பழங்கள் வரத்து இருந்தாலும் இதன் விற்பனை இப்போது சரிந்துள்ளது’’ என்றனர்.

Tags :
× RELATED மயிலாடும்பாறை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா