×

நாகை எம்பி, திருவாரூர் எம்எல்ஏ தொகுதி வாக்கு எண்ணும் பணியில் 729 பேர் செல்போனுக்கு அனுமதியில்லை தேர்தல் அலுவலர் ஆனந்த் அறிவிப்பு

திருவாரூர், மே 19:  நாகை எம்பி தொகுதிக்குட்பட்ட நாகை, வேதாரண்யம், கீழ்வேளூர், திருவாரூர் மற்றும் நன்னிலம் ஆகிய 6 எம்எல்ஏ தொகுதிகளில் பதிவான வாக்குகள் மற்றும் திருவாரூர் எம்எல்ஏ தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள்  ஆகியவை வாக்கு எண்ணும் மையமான திருவாரூர் திரு.வி.க  அரசு  கலைக்கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை வரும் 23ம் தேதி  நடைபெறுவதையொட்டி வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் தேர்தல் அலுவலர் ஆனந்த் பேசுகையில், வரும்  23ம் தேதி காலை 8 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை துவங்கவுள்ள நிலையில் இந்த பணியில்  ஈடுபடும் அலுவலர்கள் அனைவரும் காலை 6 மணிக்குள்ளாகவே மையத்திற்குள்  இருக்க வேண்டும்.

மேலும்  ஒவ்வொரு வாக்கு எண்ணும் மேஜைக்கும் தலா ஒரு வாக்கு எண்ணும் அலுவலர், உதவி அலுவலர் மற்றும் நுண்பார்வையாளர் என மொத்தம் 17 மேஜைகளுக்கும் 51 அலுவலர்கள் வீதம் 306 அலுவலர்கள் மற்றும் திருவாரூர் எம்எல்ஏ தொகுதியின் இடைதேர்தல் வாக்கு எண்ணிக்கைக்காக 51 அலுவலர்கள் என மொத்தம் 357 அலுவலர்களும், இதர பணிகளுக்காக 372 அலுவலர்களும் என மொத்தம் 729 அலுவலர்கள் பணிகளில் ஈடுபடுகின்ற நிலையில் இந்த வாக்கு எண்ணும் மையத்திற்குள் அலுவலர்கள் யாரும் செல்போன் எடுத்து வர அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தேர்தல் அலுவலர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Tags : Naganai ,Tiruvarur MLA Vote ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் சமக நிலைப்பாடு 15...