×

கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் கிரிவலம்

ஜெயங்கொண்டம், மே19: ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில்  பவுர்ணமி கிரிவலம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி  கணக்கவிநாயகர், பிரகதீஸ்வரருக்கு சந்தனம், பால்,இளநீர், தேன் உள்ளிட்ட பலவகை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தேவாரம், திருவாசகம் பாடப்பட்டது. அதன்பின் பிரகதீஸ்வரர் முன்னின்று தீபஒளி ஏற்றி கோயிலை சுற்றி பக்தர்கள் கிரிவலம் வந்தனர். ஏராளமான சிவனடியார்கள் உள்ளிட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Tags : devotees ,giravalam ,
× RELATED பக்தர்கள் இல்லாமல் திருவில்லி. ஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவம்