ஓய்வு நீதிபதி வீட்டில் சோலார் பவர் சிஸ்டம் பொருத்தி தருவதாக கூறி ரூ.98 ஆயிரம் மோசடி வாலிபர் கைது

ஜெயங்கொண்டம்,மே19: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரிய வளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோகன் (60). இவர் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி. இவர் தனது வீட்டிற்கு சோலார் பவர் சிஸ்டம் அமைப்பதற்கு தீர்மானித்து கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள பூதாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன் மகன் வினோத்  (31) என்பவரிடம் கடந்த ஜனவரி 8 ம் தேதி 98 ஆயிரத்து 805 ரூபாயை கொடுத்து சோலார் பவர் சிஸ்டத்தை பொருத்தித்தருமாறு கூறியுள்ளார். இந்நிலைையில் இதுநாள் வரை வினோத் எந்த வேலையும் செய்யாமல் தன்னை ஏமாற்றி வந்ததாகஓய்வு நீதிபதி அசோகன் ஜெயங்கொண்டம்  காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்  இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் வழக்கு பதிவு செய்து வினோத்தை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

× RELATED ஐகோர்ட் நீதிபதி தகவல் போக்குவரத்து...