×

பெரம்பலூர் அருகே சிறுகுடல் கிராமத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாக தேரோட்டம்

பெரம்பலூர்,மே19: பெரம்பலூர் அருகே குன்னம் தாலுகா சிறுகுடல் கிராமத்திலுள்ள  சுப்பிரமணியசுவாமி கோயில் வைகாசி விசாக தேரோட்டம் நேற்று   நடைபெற்றது.இந்தத் தேர் திருவிழாவையொட்டி கடந்த பத்தாம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை கணபதி ஹோமம், நவக்கிரஹ யாகம், மஹாலட்சுமி ஹோமம், தீபாரா தனை நடத்தி, பந்தக்கால் முகூர்த்தம் நடத்தி, கொடியேற்றி, காப்பு கட்டுதல் நடைபெற்றது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று (18ம் தேதி) காலை 10.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடை பெற்றது. இதில் சிறுகுடல் கிராமத்தினர் மட்டுமன்றி, கீழப்புலியூர், செங்குணம், அருமடல் பலாம்பாடி, வாலிகண்டபுரம், முருக்கன்குடி, பெரம்பலூர், குன்னம், சித்தளி, பேரளி, வேப்பூர், அசூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

Tags : Subrahmanya Swamy Temple ,village ,Perambalur ,
× RELATED பழவேற்காடு அடுத்த கோடைக்குப்பம் மீனவ...