×

மினிலாரி மோதி சிறுவன் பலி தந்தை, மகன் காயம்

ஜெயங்கொண்டம், மே19: ஜெயங்கொண்டம் அருகே மினிலாரி மோதியதில் சிறுவன்பலியானான். . தந்தையும் மகனும் காயமடைந்தனர். ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிலம்பூர் கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(40). இவரது மகன்கள் விஜயராஜ்(14), தர்மேந்திரன்(11). இவர்கள் ஆண்டிமடத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில் ராஜேந்திரன் அவருக்கு சொந்தமான பைக்கில் விஜயராஜ் தர்மேந்திரன் ஆகிய மூவரும் சிலம்பூர் புக்குழி ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது வளைவில் திரும்பும் பொழுது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த சரக்கு ஏற்றும் மினிலாரி ராஜேந்திரன் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் ராஜேந்திரன், விஜயராஜ், தர்மேந்திரன் ஆகியோர் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆண்டிமடத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு விஜயராஜ் சிகிச்சை பெற்று கும்பகோணம் தனியார் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சை கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே விஜயராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராஜேந்திரன் ஆண்டிமடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Minilari ,
× RELATED மகன் கீழே விழுந்ததுகூட தெரியாமல்...