×

சாலை பராமரிப்பு பணியை தனியாருக்கு வழங்கும் கொள்கை முடிவை அரசு கைவிட வேண்டும் சங்க பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

பெரம்பலூர்,மே19: சாலை பராமரிப்புப் பணியை தனியார் பராமரிக்க வழங்கும் கொள்கை முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என பெரம்பலூரில் நடந்த தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரம்பலூரில் தமிழ்நாடு நெடுஞ்சா லைத்துறை சாலை பணியாளர் சங்க த்தின் மாவட்டப் பொதுக்குழு கூட்டம் துறைமங்கலத்தில் உள்ள பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்ட அர ங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தி ற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர்  சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

சங்கத்தின் மாநிலச் செயலாளர் மகேந்தி ரன் துவக்க உரையாற்றினார். பெரம்ப லூர் மாவட்டச் செயலாளர் சுப்பிரமணி யன் விளக்கி பேசினார் கூட்டத்தில் தமிழ்நாடு நெடு ஞ்சாலைத்துறை சாலைப் பணியாள ர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் சாலைப் பணி யாளர்களின் 41மாத பணிநீக்க கால த்தை பணிக்காலமாக முறைப்படுத்தி  பணப்பயன்கள் வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு தொழில்நு ட்ப கல்வித் திறன்பெற ஊழியர்களு க்கான ஊதியம் ரூ5200 லிருந்து ரூ  20, 200 வரையிலும் மற்றும் தர ஊதியமாக ரூ1900ம் வழங்க வேண்டும்.சாலைப் பணியாளர்களுக்கு வேலை நிதியில் ஊதியம் வழங்குவதைக் கைவி ட்டு அரசின் பொது நிதியிலிருந்து ஊதி யம் வழங்க வேண்டும். சாலைப் பணியா ளர்களின் பணி நீக்க காலத்திலும்  பனி க்காலத்திலும் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கடந்த13 ஆண்டுகளாக பணி வழங்காமல் இருப்பது வருந்தத்தக்கது. இதன்படி வாரிசுப் பணி வழங்குவதற்கு தடையாகவுள்ள விதிமுறைகளைத் தளர்த்திப் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைப் பராமரிப்பு பணியை தனியார் பராமரிக்க வழங்கும் கொள்கை முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், விருதுநகர், பழனி ஆகிய கோட்டங்களின் மாநில, மாவட்ட நெடு ஞ்சாலை பராமரிப்புப் பணிகளை தனி யார் கம்பெனி பராமரிக்க, போடப்பட்ட ஒப்பந்தத்தைத் திரும்பப்பெற்று அரசே ஏற்று நடத்த முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதில் இதில் சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட, வட்டார, நகர நிர்வா கிகள் ஏராளமானோர் கலந்து கொண்ட னர். முடிவில் மாவட்ட இணைச் செயலாளர் முத்து நன்றி கூறினார்.

Tags : government ,
× RELATED மின்துறை தனியார்மயமாக்கப்படுவதை...