அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் தபால் வாக்குகள் எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி

அரியலூர், மே 19: நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தபால் வாக்குகளை எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி நேற்று நடைபெற்றது. அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த பயிற்சியில்,வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ள சிதம்பரம்(தனி) மக்களவைத் தொகுதிக்கான தபால் வாக்குகள் எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள 5 கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 7 தபால் வாக்குகள் எண்ணும் மேற்பார்வையாளர்கள், 17 தபால் வாக்கு எண்ணும் உதவியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்கு சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலரும், அரியலூர்கலெக்டருமான விஜயலட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் பரிதாபானு (பொது), இளங்கோவன் (தேர்தல்) மற்றும் 6சட்டப்பேரவை தொகுதிகளுக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

× RELATED கிருஷ்ணராயபுரம்...