×

அண்ணாபல்கலை. தரவரிசைப் பட்டியல் வெளியீடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரி முதலிடம் பெற்று சாதனை

திருச்செங்கோடு, மே 19: தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் மற்றும் பொதுமக்களின்  நலனைக் கருத்தில் கொண்டு வெளியிட்டு வருகிறது.2018 நவம்பர் மற்றும் டிசம்பரில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் கல்லூரிகளின் தரவரிசைப்  பட்டியலை அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு துறை அறிவித்துள்ளது. இதில் அண்ணா பல்கலைக்கழக இணைவு பெற்ற 30 தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளில் 89.59 சதவீத தேர்ச்சி பெற்று திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல்  கல்லூரி முதலிடம் பெற்றுள்ளது. அடுத்த நான்கு இடங்கள் பெற்ற கல்லூரிகள் வருமாறு: கோவை டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி (65.87 ), ஈரோடு பண்ணாரியம்மன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (83.37), விருதுநகர் மெப்கோ  பொறியியல் கல்லூரி( 82.65), தூத்துக்குடி நேசனல் பொறியியல் கல்லூரி (82.52) அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற 481 பொறியியல் கல்லூரிகளில் நவம்பர் டிசம்பர் செமஸ்டர் தேர்வுகள் அடிப்படையில் விவேகானந்தா மகளிர் பொறியியல்  மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி  81.65 சத தேர்ச்சியைப் பெற்று  மூன்றாமிடம் பிடித்துள்ளது. 88.12 சதம் பெற்ற சேலம் கைத்தறி தொழில் நுட்பக் கல்லூரி முதலிடத்தையும்,  85.57 சத தேர்ச்சி பெற்று கோவை பிஎஸ்ஜி தொழில் நுட்ப கல்லூரி இரண்டமிடமும் பெற்றுள்ளன.78.14 சதம் பெற்ற சென்னை வேலம்மாள் பொறியியல் கல்லூரி  நான்காமிடத்தையும், சென்னை ஆர்எம்டி பொறியியல் கல்லூரி 76.91 சத தேர்ச்சி பெற்று ஐந்தாமிடத்தையும் பிடித்தன.


இது குறித்து விவேகானந்தா கல்லூரிகளின்  தாளாளர் கருணாநிதி கூறியது: அண்ணா பல்கலைக்கழக  தர வரிசைப் பட்டியலில் எங்களது  இரண்டு  கல்லூரிகளும்  தமிழக  அளவில் முதலாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பெற்றது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். அண்ணா பல்கலைக்கழகம் தரவரிசைப் பட்டியலை வெளியிடுவதன் மூலம்  மாணவர்களும் பெற்றோர்களும் சிறந்த கல்லூரியை தேர்வு செய்ய உறுதுணையாக இருக்கும். கிராமப்புற மகளிர் கல்வியில் மேன்மை அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் கிராமப்புறத்தில் எங்கள் கல்லூரிகள் அமைந்துள்ளன. வெறும் பட்டங்கள் பெறுவது  மட்டுமின்றி வேலை வாய்ப்பையும் பெறும் வகையில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. மத்திய அரசின் ஐஏஎஸ் போட்டித்தேர்வு மற்றும் தமிழக அரசின்  டிஎன்பிஎஸ்சி ஆகிய தேர்வுக்கான பயிற்சிகளும் தீவிரமாக அளிக்கப்படுகின்றன.இதன் காரணமாக ஒரே வளாகத்ததில் சுமார் 25 ஆயிரம் மாணவிகள்  பயிலும் தென்கிழக்கு  ஆசியாவின் பெரிய கல்வி நிறுவனமாக விவேகானந்தா கல்லூரிகள் உள்ளன  என்றார்.

Tags : Annapalkalai ,Rank List Release Vivekananda Women's Engineering College ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு