×

மறு ஓட்டுப்பதிவு 400 போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு

தேனி, மே 17: தேனி மாவட்டத்தில் மே 19ம் தேதி மறுஓட்டுப்பதிவு நடைபெறும் பாலசமுத்திரம், வடுகபட்டி ஓட்டுச்சாவடிகளில் மத்திய பாதுகாப்பு படை உட்பட 400 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர் என தேனி எஸ்.பி., பாஸ்கரன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது: பெரியகுளம் தாலுகா வடுகபட்டி, ஆண்டிபட்டி தாலுகா பாலசமுத்திரம் கிராமங்களில் தலா ஒரு ஓட்டுச்சாவடிகளில் மறுஓட்டுப்பதிவு மே 19ம் தேதி நடக்கிறது. வடுகபட்டி ஓட்டுச்சாவடியில் 1405 வாக்காளர்களும், பாலசமுத்திரம் ஓட்டுச்சாவடியில் 1255 வாக்காளரும் ஓட்டளிக்க உள்ளனர். ஓட்டுப்பதிவு அமைதியாக நடைபெற ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் தலா ஒரு டி.எஸ்.பி., 9 இன்ஸ்பெக்டர்கள், 23 சப்-இன்ஸ்பெக்டர்கள் 12 மத்திய பாதுகாப்புபடை வீரர்கள் உட்பட 200 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். ஓட்டுப்பதிவு நடைபெறும் கிராமத்தில் மட்டும் இன்றி சுற்றுக்கிராமங்களிலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வடுகபட்டி, பாலசமுத்திரத்திற்கு வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படும், தேவையின்றி வரும் நபர்கள் அனுமதிக்கபடமாட்டார்கள். இதே நேரத்தில் மாவட்டத்தில் எங்கும் பிரச்னை வராத வகையில் போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?