திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் தீராத நோய் சிகிச்சைக்கு ஆயூஷ் கிளப் துவக்கம் சித்த மருத்துவ அலுவலர் தகவல்

திருச்சி, மே 17: இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் காமராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி புத்தூர் அரசு தலைமை சித்த மருத்துவமனையில் சகல நோய்களுக்கும் சித்த மருத்துவ சிகிச்சை, ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை, ஓமியோபதி மருத்துவ சிகிச்சை, யுனானி மருத்துவ சிகிச்சை, சுகப்பிரசவம் ஏற்பட மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் வழங்கும் சிறப்பு சிகிச்சை பிரிவு நாள்பட்ட நோய்களுக்கு வர்ம சிகிச்சை பிரிவு மூளை நரம்பு பாதிப்பு குழந்தைகளுக்கு (ஆட்டிசம் குழந்தைகள்) சிறப்பு சிகிச்சை பிரிவுகள் ஒரே வளாகத்தில் பொதுமக்களுக்காக செயல்பட்டு வருகிறது. காலை 7.30-12 மணி வரையிலும் மதியம் 3-5 மணி வரையிலும் மருத்துவமனை திறந்திருக்கும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நாள்பட்ட, தீராத நோய்களுக்கு சித்தா, ஆயுர்வேதா ஓமியோபதி, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களைக் கொண்டு ஆயுஷ் கிளப் செயல்பட்டு வருகிறது.  மாலை 3-5 மணிவரை இந்த ஆயுஷ் கிளப் திறந்திருக்கும்.

தீராத நாள்பட்ட நோய்களுக்கு சிறப்பு யுனானி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மூட்டுவலி, சர்க்கரை நோய், தோல் நோய், உடல் பருமன், கருப்பைக்கட்டி, சினைப்பைக்கட்டி, மார்பகக்கட்டி, வெள்ளைபடுதல், மாதாந்திர தீட்டு பிரச்னை, ஆஸ்துமா, தைராய்டு, பித்தப்பை கற்கள், சிறுநீரகக்கற்கள், பித்தவெடிப்பு, முடி உதிர்தல், முகப்பரு, ஆண்மை குறைவு, சைனஸ் தொந்தரவு, ஆஸ்துமா மற்றும் குழந்தையின்மை உள்ளிட்ட பல்வேறு  நோய்களுக்கு அரசு ஆயுஷ் மருத்துவர்கள் சிறப்பு சிகிச்சை அளித்து வருகின்றார்கள். ஆங்கில மருந்துகளுடன் ஆயுஷ் மருத்துவ முறைகளில்  ஏதாவது ஒன்றை தனித்தோ அல்லது சேர்த்தோ எடுத்துக்கொண்டால் சகல நோய்களும் தீரும், கட்டுப்படும். அனைத்து நோய்களுக்கும் அறுவை மருத்துவம் இன்றி மருந்துகளைக்கொண்டும் புற சிகிச்சையைக் கொண்டும் நோய்களை குணப்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி நோயின்றி வாழலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: