மாற்றுத்திறன் வாக்காளர் ஓட்டு போட பயிற்சி

திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் நேற்று காலை பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் எவ்வாறு  வாக்களிப்பது என்பது  குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.  மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம்  இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் வசிக்கும்  மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக அவனியாபுரம், திருப்பரங்குன்றம் ஆகிய இரு பகுதிகளுக்கு வாகன வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வாகனத்தை இயக்கும் டிரைவர்களின் தொடர்பு எண்கள் பயிற்சிக்கு வந்தவர்களுக்கு வழங்கப்பட்டது. திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் நேற்று பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு எவ்வாறு வாக்களிப்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

வெளியூர் ‘புள்ளிகள்’ இன்று கிளம்பிடணும்

திருப்பரங்குன்றம் தொகுதிக்கு கடந்த ஏப்.9ம் தேதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த இடைத்தேர்தல் பணிகளுக்காக பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த வெளியூரை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் தொகுதிக்குள் முகாமிட்டு தேர்தல் பணிகளை கவனித்து வந்தனர். இந்த நிலையில் தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் நிறைவு பெறுகின்றது. அதன் பின்னர் வெளியூர் ஆட்கள் தொகுதிக்குள் இருக்க அனுமதி இல்லை. எனவே இன்று மாலையுடன் வெளியூர் ஆட்கள் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: