நரியம்பாளையத்தில் தார்சாலை அமைப்பு

பட்டுக்கோட்டை, மே 17:  தினகரன் செய்தி எதிரொலியால் பட்டுக்கோட்டை நரியம்பாளையத்தி–்ல் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில் பழைய தார்சாலைகளை புதிய தார்சாலைகளாக மாற்றும் பணி  நடந்தது. இதேபோல் பட்டுக்கோட்டை நகராட்சி 1வது வார்டு நரியம்பாளையம் வடக்கு பகுதியில் புதிய தார்சாலையாக மாற்றுவதற்கு கப்பிக்கல் கொட்டப்பட்டு 8 மாதங்களுக்கு மேலாகிவிட்டது. இதேபோல் பல வார்டுகளில் புதிய தார்சாலைகளாக மாற்றுவதற்கு கப்பிக்கல் கொட்டப்பட்டு பல மாதமாகிவிட்டது.  ஒரு சில வார்டுகளில் புதிய தார்சாலைகள் அமைக்கப்பட்டாலும் பல வார்டுகளில் இன்னும் சாலைகளில் கப்பிக்கல் பல மாதங்களாக கொட்டப்பட்டுள்ளதால் இருசக்கர வாகனங்களில் செல்லும் பலர் நிலை தடுமாறி கீழே விழுந்து  படுகாயமடைகின்றனர் என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை சம்மந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஒரு சில வார்டுகளில் புதிய தார்சாலை அமைக்கும் பணி முடிந்திருந்தாலும் கூட இன்னும் பல வார்டுகளில் கப்பிக்கல் அப்படியே கொட்டப்பட்டுள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் உடனடியாக பணிகளை முடித்து புதிய தார்சாலையை அமைத்துத்தர வேண்டுமென சமீபத்தில் தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நரியம்பாளையம் வடக்கு பகுதியில் தார்சாலை அமைத்தனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கூறுகையில், செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த நகராட்சி அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் நகரத்தில் கப்பிக்கல் கொட்டி இன்னும் போடப்படாத தார்சாலைகளையும் விரைவில்  அமைக்க வேண்டும் என்றனர்.

Related Stories: